மனகவலை ஏதுமில்லை...
-----------------------------------
அந்த ஒருவழிப் பாதையிலே...
உனக்கு வழிவிட்டு எதிர்முனையில் காத்திருப்பேன்...
நான் உனைக் காண கிடைக்கும் ஓரிரு மணித்துளிக்காக! அதை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை தான்...
ஒரு வெயில் கால மழையில் வரும் மின்னல் போல...
முடிந்து போகும் அந்த கணங்கள் தான் என் வாழ்நாளுக்கு எல்லாம் வெளிச்சம்!
என்றிருந்தேன்...
அதை நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை தான்...
இதோ... மாலை மாற்றி...
உனக்கு நான்...
எனக்கு நீ என ஆன இந்நொடியில்...
அந்த ஒரு வழிப்பாதையை
ஓடோடி நீ கடந்தது...
என் விழியின் வழியே பாயும் அன்பில் அங்கேயே சிலையாகி போவதை
தவிர்க்கத்தான் என்கிறாய்! வாழ்க்கையை நினைத்து புன்னகைக்கிறோம்...
நீயும் நானும்! "மனம் அறிந்தால்.... மனக்கவலை ஏதுமில்லை..." - என்று எங்கோ படித்ததாய் ஞாபகம்!
"கருவெளி" ராச.மகேந்திரன் - தேனி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-18