Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அன்பைத்தேடி!

- ஆதித்தியன்

அன்பைத்தேடி!

ஒரே ஒரு மகன்
வீட்டைத்தவிர அணைத்தையும் விற்று
விருப்பப்படியே படிக்கவைத்தோம்…


இன்று…
வெளியூரில் அவன் பெரிய மருத்துவன்
உள்ளூரில் நாங்கள் உழைத்துத்தேய்ந்து
நோயாளிகளாய்…!

முதல் தேதியில்
ணம் மட்டும் மணியாடர்
மூன்று மாத்ததிற்க்கு ஒருமுறை
மருந்து மாத்திரை பார்சலிலே..!

நலம்,நலமா?
உயிரற்ற எழுத்துக்களை உடலில் தாங்கி
அவ்வப்போது கடிதங்கள் ..!

அவன்,
அங்கு நவீன மருத்துவன்
நாங்கள் இங்கு,
நாடி மருத்துவனிடம்..!


இறுதி நாட்களை கழிப்போம் மகனிடம்
என்று நாங்களும் புறப்பட்டோம்
முறுக்கு வத்தல் வகைகள் அடங்கிய
கோணிப்பையுடன் குதூகலமாய்…

வாங்க நலமா?
என்ன திடீரென?
இரண்டே வார்த்தைகள்
எங்கோ கிளம்பினான்.

நாங்கள்
உழைத்து தேய்ந்தவர் என்பதனால்
ஒடிந்தவை தேய்ந்தவை போடும் அறையை
ஒதுக்கித்தந்தாள் மருமகளும்.


மாலையில் வந்த அன்பு மகன்
தேவையை மட்டும் சொல்லுங்கள் என
அறைக்குள்ளேயே சிறைவைத்தான்.

குடும்பத்துடன் அவர்கள்
வெளியே செல்கையில்
காவல் நாய்களாய் நாங்கள் இருவரும்..!

உணவு உடை எல்லாம் கிடைத்தது
உண்மை அன்பின் முகவரி கிடைக்கல…

போலி அன்பின் வெம்மை தாங்காது..

இதோ…

புறப்பட்டு விட்டோம்

கிராமத்தை நோக்கி…!


நாளை என் மகனும்
அன்பைத்தேடுவான்
அவன் மகனும்….
படிக்கிறான் ‘அமெரிக்காவிலே’!!


-கவிஞர் ஆதித்தியன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-01


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube