கடவுளை பார்த்திடில்!
--------------------
எங்கே நம் கடவுள்
என் உள்ளக் குமுரல்கள் அவன் கேட்டிட வேண்டும்
ஆண்டவனே உனக்கு ஆண்டவன் என்று பெயர் வந்தது
ஆண்டாண்டு காலமை எமை
ஆண்டவர்கள் செய்த தந்திரத்தில்
நீ கை தேர்த்ததலோ
எமை பிரித் ஆண்டான் ஆங்கிலேயன்!
நீ உலகை! - மதம் என்ற பெயரில்
பிரித்து தான் ஆழுகிறாய்
மதச்
சண்டை இல்லா விட்டால் உனை
மதிக்க ஆளில்லை!
மதங்களே இல்லாவிட்டால்
உனக்கு இங்கு வேலை இல்லை!
படைத்தவனே !
நீ உனை புகழ வேண்டும் என்றா
உயிர்களை படைத்தாய்!
நாங்கள்
மடிந்து கொள்வதற்கா
மதங்களை படைததாய்!
இந்த மண்ணில்
விழும் குருதி
உன்மனத்தை
ஈரமாக்கவில்லையா
தொடுப்பவன்
நீ என்று ஆனபின்
அம்புகளுக்கு
ஏன் தண்டனை!
-சிவப்பிரகாசம்
---------------------------------
கணம் கண்ட நாள் கொண்டு
தினம் நினைக்கும் என் உள்ளம்
திகில் கொண்டு உற்று பார்த்தது
உனை அல்ல !, உனை என்னும்
என் உள்ளத்தை!
---------------------------------
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-18