50 வெள்ளி
-------------------
கையில நூறு பணமும்
கறிச்சோறு பொட்டலமும்
கொடுத்து ஆள் சேர்த்து
கூட்டத்தை கூட்டுவதெல்லாம்
கட்சி மாநாட்டிற்காக
கைத்தடிகள் செய்யும் வேலை
சிங்கை
தரமான தமிழ் நிகழ்வுகள்
தருவதுதான் வரலாறு!
தமிழ் கேட்க கூலி – அது
தன்மான கோளாறு!
தமிழ் கேட்க அழைத்து
தராதீர்கள் வெள்ளி! – அது
தமிழ் தாக உணர்வுக்கு
வைக்கின்ற கொள்ளி!
தாய்ப்பால் பருகிட
தருகின்ற கூலி – அது
தாய் சேய் உறவுக்கு
தடைபோடும் வேலி
தமிழ் என்றால்
வருவோமே ஆர்வத்தோடு
தமிழ் என்றும்
வாழட்டுமே கர்வத்தோடு!
- பீலி
- பீலி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-25