நிகழ் வெளி
-----------------
துருதுருத்து
எலும்புக்கூடாய்
கல்லறைக்குள்
அமிழ்ந்துகிடந்தது
அச்சடலம்
அறுத்து எறியப்பட்ட
தோரணங்களும்
கொழுத்திய ஊதுபத்தியும்
ஊத்திய பாலும்
உடைக்கப்பட்ட
பானைத்துண்டங்களாய்
சிதைந்துகிடந்தன
வாழும்போது
ஓங்கியறையப்பட்ட கதவுகள்
வாழ்வின் முடிவில்
திறக்கப்படுகின்றன
ஆனால் வாழ்க்கையோ
வாழும்போது
ஓடுக்கப்பட்ட சாளரத்துக்குள்
தன்னை பூட்டிக்கொள்கிறது
-கனக ரமேஸ்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-25