3... ?
கோயில்...
மசூதி...
ஆலயம்...
குங்குமம்...
குல்லாய்...
சிலுவை...
ஒருவனுக்காய்!
----------------------------------
அடுக்குமாடி
யன்னல்களில்
வாழ்க்கையைத்
துடைத்துவிட்டு
செங்குத்தாய்
கீழ்விழுந்து
சிதறிக்கிடக்கிறாள்......
பணிப்பெண்?
-------------------------------
இன்றைக்கும்
பட்டினியில்லை......
தலைவாழை வானம்
மேகக்குழம்பு
நட்சத்திரப் பொரியலுடன்
நிலாச்சோறு
-------------------------------
வேதம்
கோயில் மாடங்களிலும்
மசூதி வளாகங்களிலும்
ஆலய உச்சிகளிலும்
மாறி மாறி
பேதமின்றிப்
பறந்தமர்ந்து
வந்தடையும்
புறாக்கள்
முணுமுணுக்கும்
உள்ளே
வந்து போகும்......
மனிதர்களைப் பார்த்து !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01