யாருக்கு.. பிறப்பிடம்…
01.
யாருக்கு
------------
உண்டியலில் காசு போட்டு
ஒருவன்
கண்டதெல்லாம் கேட்டு
கடவுளுக்குக் கொடுக்கிறான்
இடைஞ்சல்,
இடையில் புகுந்து
ஒருவன்
கிடைப்பதைச் சுருட்டிடவே
கிளப்புகிறான் உண்டியலை,
கண்டுபிடிக்கக் கிளம்புகிறார்
சிலர்-
காவலர் என்ற பெயரில்,
காரணம் யார் என்பதைக்
கண்டுபிடிக்க
சிண்டுபிடிச் சண்டை,
உண்டு இதில் ஒற்றுமை-
ஒட்டு மொத்தமாய்
இவர்
வேண்டுதல் எல்லாம்
கடவுளிடம்தான்…!
கடவுளின் கருணை
யாருக்கு…
கடவுளே..கடவுளே…!
02.
பிறப்பிடம்…
---------------
குயில் பாடுவது உன்னைக்
கூப்பிட அல்ல,
கூண்டில் இல்லாத
குதூகலம்தான்…!
சுதந்திரம் எப்போதும்
சுதந்திரக் கலைகளின்
பிறப்பிடம்தான்…!
முத்தெடுக்கத்தான்…
மூழ்கினால்
முத்தெடுக்க வேண்டும்
கடலிலே,
கிளிஞ்சல் ஓடுகளைக்
கிண்டி எடுக்கவேண்டாம்-
கிடைக்கும் அவை
கரையியிலே…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-14