காத்திருக்கிறேன்!
--------------------
காத்திருக்கிறேன்
கண்ணீர் வழிய
கரைகடந்து உயிர்தப்ப முயலும்
கன்னித்தமிழர்களை
கரம் நீட்டி அழைத்துக்
காத்திருக்கிறேன்!
இனப்படுகொலைகளும்
இடையறாச் சண்டைகளும்
இலங்கைத் தீவில்
இல்லாதொழியும் அந்த
இனிய நாளை நோக்கிக்
காத்திருக்கிறேன்!
மனிதநேயம் மலர்ந்து
மக்கள் துயர் நீங்கும்
மகத்தான ஒரு
விடியலை நோக்கிக்
காத்திருக்கிறேன்!
-கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-16