சிறுத்த இடையும்
சின்ன விழியுமாய்
என்னை தினம் தினம்
சித்திரவதை செய்கின்றாய்
எனக்குள்ளே உன்னைப்பற்றி
கற்பனை ஓவியம் தீட்டி வைத்தேன்
நேரில்கண்டால் சிலவேளை மாற்றமடையலாம்
எனினும் வானவில் என்றுமே
வண்ணம் இழந்தது இல்லை
தொலைவிலேயே இருந்துகொள்
உன்னை நான் ரசித்துக்கொள்கின்றேன்
இது பருவக்காதல் இல்லை
பழகிய காதல் இல்லை
புரிந்த காதல்
என்மனதை நீயும்
உன் மனதை நானும்
புரிந்துகொண்ட காதல்
உனக்காக நான் வாழும்போது
எனக்காக நீ வாழும் காதல்
உறவாய் இருந்தவள்தான்
என்தன் உயிராக இன்று இருக்கின்றாய்
உன்பெயர் உச்சரிக்கமுன்பே
எனக்குள் ஓராயிரம் மின்னல்கள் பரவும் உணா¢வு
உன் படம் கண்டுகொண்டால்
சொல்லத்தேவையில்லை சொர்க்கத்தில்
நான் வாழும் எண்ணம்
எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த
ஓவியத்தை தினம் தினம்
கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன்
நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம்
நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய்
வேண்டுமடி நீ எனக்கு
கொலுசொலிபோல் சினுங்கிக்கொள்ளவும்
வெறுப்பதுபோல் விரும்பியழைக்கவும்
ஒருநொடி உச்சுக்கொட்டி
என்னை வெறுப்பேத்தவும்
செல்லமாய் சீறிவிழவும்
வேண்டும் நீ எனக்கு
எப்போது சொல்லிக்கொள்வாய்
என்னை நீ காதலிப்பதாய்
காத்திருப்பேன் உன் பூவிதழ் வரைந்திடும்
அந்த பொன்மொழிக்காய்
என்றென்றும் காத்திருப்பேன்
காலமெல்லாம் உன் நினைவுடனேயே வாழமுடியும்
காதல் என்று ஒரு வா£¢த்தை
எனக்குள் நீ விதைத்தால்
கறுப்புநிலவினை காதல் செய்யும் கனவுக்காதலன் ந.பரணீதரன்
30-07-2003
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01