“சரியான பிணம்”
------------------
அவன்
நடந்து வருகிறான்!
“பிணம்” என்று
சிலர் பிதற்றுக்கிறார்கள்!
அவனுடைய கண்கள்
பிணமாகியிருந்தன!
“பொணம் போது பாரு”
கல்லெறிந்தார்கள் சிலர்
விளையாட்டாக!
அவன்
பிணமாகியிருந்தான்!
பிணமாகவே நடந்தான்!
அருகிலுள்ளவர்களின் கூச்சல்
விகாரமடைந்து
பயங்கர முகங்களாக
மாறியிருந்தன!
எல்லோரும்
பிணத்தைக் கண்டு
வெறுக்கிறார்கள்!
எல்லோரும்
பிணங்களைப் பற்றி
பேசுகிறார்கள்!
எல்லோரும்
பிணங்களை அடையாளம்
காட்டுகிறார்கள்!
பிணங்களை
உருவாக்கும்
இவர்களின் பிடியிலிருந்து
விலகி
வேகமாகப் பின்தொடர்கிறேன்
அந்தப் பிணம்
என்கிற மனிதனை!
‘அவன் சரியான பிணம்’
என்று கதறும்
ஓசைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன!
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-13