எச்சி ... அடுத்த நிறுத்தம் ... குறுக்குச் சுவர்
---------------------------------------------------------
1.எச்சி
காறி உமிழ்ந்த
எனது எச்சில்
புனிதம்தான்
சட்டையில் வந்து
தெறிக்கும்பொழுதுதான்
அசிங்கம் உணருகிறேன்.
தெறிப்பதை தடுக்க
துப்புவதை நிறுத்துகிறேன்
2.அடுத்த நிறுத்தம் மனிதநேயம்
இருக்கவோ ? எழவோ?
இருக்கையின் நுனியில் ....
மனப்போராட்டம் !
பெரியவரின் தள்ளாமை ...
தர்மசங்கடப்படுத்துகிறது !
இருக்கவோ ? எழவோ?
எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !
எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!
3.குறுக்குச் சுவர்
ஏறவிடாது வழிமறித்து
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது
வாழ்க்கையிலும் அப்படித்தான்
- ரசிகவ் ஞானியார்
K.Gnaniyar,
Software Developer,
TransIT mPower Labs,
Bangalore.
www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com
www.lifebyliferay.blogspot.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-23