பாதிக்கப்பட்ட பின்
போராடத் துணிந்தால்
நீ என்ன புரட்சிக்காரன்
பழிவாங்குவதற்காய் மட்டும்
ஆயுதம் ஏந்துபவனா
சமூகக் காவலன்?
உசுப்பிவிட்டால் தான்
எழுந்திருப்பேன் என்றால்
நீயா போர்வீரன்?
ஓர் அபயக்குரல் போதாதா
போர்ப்பரணி பாட
சக f¦விக்கு இழைக்கப்படும்
ஓர் அநீதி போதாதா
யுத்தம் செய்ய
சுய இழப்புக்காய்க் காத்திராதே-
அழைப்புக்காய்...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01