ஏவாள்கள்
-----------------
சொல்லிவிடலாம்தான்
சொல்தலுக்கு முன்னும் பின்பும்
காட்சிகள் மாறிவிடலாம்
முரண்பாடுகளின் உச்சம் நீ
ஏன்றாலும்
முரண்பாடுகள் எனக்குப் பிடிக்கும்
என்பதால்
உன்னையும் பிடிக்கிறது
ஆனந்தமாய் பருகக்கூடிய நீர்தான்
ஏன்றாலும்
கொஞ்சம் விசம் இருக்கலாம்
இருந்தாலென்ன
ஏத்தனையோ சாம்ராஜ்யங்கள்
சரிந்திருக்கின்றன
சில இதழ்களின் விரிதல்களில்
ஏவாழ்களின் வழித்தடங்களில்
இதுவரை மாற்றமில்லை
ஏவாழ் அழகானவள்
என்பதை விட வேறென்ன
ஆழகிய விழிகளில்
ஆயிரம் பட்டாம் புச்சிகள்
யாக்கிரதை
அவை கூரிய அம்புகளுடன்
வரலாம்
போருக்குத் தயார்
எனில்
ஆதாமின் பலத்துக்கு
முன்னால்
ஏவாழ்கள் எம்மாத்திரம்
- ஸ்ரெபினி
- ஸ்ரெபினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-09