கவிதைக்காரன்
கவிதைக்காரன்
சொந்தமாய்
ஏதும்
எழுதுவதில்லை
எதிரில்
சுருங்கிய
தேகத்துடன்
வரும்
மோர்
கிழவியின்
கூடையிலிருந்து
முதல் கவிதை
பருகிவிடுகிறான்
ஓடும்
ரயிலில்
நடந்து
வரும்
விழியிழந்த
பாட்டுக்காரனின்
சட்டைப்பையிலிருந்து
மற்றொன்று
மருத்துவருக்கு
காத்துக்கிடக்கும்
இருக்கையின்
பின்புறமிருந்து
கிழித்துக்கொண்டு
மருந்தை
மறந்து
வெளியேறுகிறான்.
இருள்
வீட்டின்
கொல்லைபுற
குழாயில்
சொட்டும்
இசையிலிருந்து
யாருக்கும்
தெரியாமல்
எடுத்ததை
எழுதுகிறான்
திருடி
எடுத்த
மகிழ்ச்சியை
இறகை வருடி
கிடைத்த
சோகத்தை
சேர்த்து
இனிதாய்
முடிகிறது
ஒரு
தொகுப்பு.
எல்லா
வெளியும்
கவி
நிறைவதால்
சொந்தமாய்
ஏதும்
எழுதுவதில்லை
கவிதைக்காரன்.
- சிவ. தினகரன்
குன்றத்தூர்..
சென்னை - 69
9444 254803
chennaithamilan@india.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-07