கவிதையின் காதல்
விடியலில் வேகம் தெரிகிறது
இரவு நீளமாய் இருக்கிறது
நிலவின் பொறுமை புரிகிறது
கனவுகளின் முகவரி தெரிகிறது
தூக்கம் தானாய் தொலைகிறது
தென்றலின் அமைதி புரிகிறது
கண்ணாடியின் அர்த்தம் விளங்கியது
அட , எனக்கும் கவிதை வருகிறதே !
ஓ ... என்னுள் காதல் பூத்துள்ளதா....?!
-கீதையின் நாயகன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-07