இரவு மழை !
அத்தனை பாதச்சுவடுகளையும்
தாண்டி, பளிச்செனத்தெரியும்
குழந்தையின் பாதச்சுவடுகளைப்
பார்த்து ரசிக்கச்செய்ததற்காக
நேற்றுப்பெய்த இரவு மழையே
உனக்கு நன்றி !
உனக்கான கண்ணாடி
உனக்கான கண்ணாடியில்
கல்லெறிந்தாய்
உடைந்த ஒவ்வொரு துண்டும்
உன்முகம் காட்டும்
என்பதை மறந்து!
சிவப்பதிகாரம்
எத்தனை பொற்கொல்லர்
உயிர்கள்
ஒற்றைச்சிலம்பிற்கு!
-சரோஷா
- சரோஷா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-07