அவனும் நானும்...
முதல் நாள் எடைக்கு
போட்ட
பழையப் பேப்பருடன்,
தொலைந்திருக்கும் உன்
அலுவலக
கோப்போன்றும்.
உனக்கு பிடித்த தொலைக்காட்சி
நிகழ்ச்சியை
இடையூறு செய்து ரசிப்பேன்,
கண்ணீர் சீரியல்களை.
உனக்கு பிடித்த உடை ஒன்றை,
இனி நீ அணியவே இயலாது
பாழாக்கியிருக்கிறேன் நான்.
தவறுகள் செய்து தப்பிக்க தெரிகிறது எனக்கு,
விழி தாழ்த்தி மௌன மொழியால்
மன்னிக்க தெரிகிறது உனக்கு,
ஓர் புன்னகையால்.
தாயுமானவனாய்,
தகப்பன்சாமியாய்,
யாதுமாகி விடுகிறாய் அப்போதெல்லாம்............
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-24