தோழர் பழனிவேல்
வங்கியிலிருந்து
மாற்றலாகிப் போன அதிகாரிகள்
எப்போதாவது
வேறு வேலையாக வரும்போது
நண்பர்களுடன் சாப்பிடப் போவார்கள்
ஆபீஸ் பையன் பழனிவேல் கையில்
காப்பிக்கு கொடுத்துவிட்டு
நான்கு வருடங்களாக
இது நடந்துவந்தது.
தணிக்கைக்கு வந்த
வசந்தா மேடத்தை
பஸ் ஏற்றிவிடுவதற்கு முன்
காப்பி சாப்பிட அழைத்தபோது
நெளிந்தவாறே போனான்.
சில்லரையை அவர் தேடியபோது
கொடுக்க அவன் முன் வந்ததை
ஏற்றுக்கொண்டார்.
இன்றும்
வங்கி ஊழியர்
வியப்புடன் பேசிக்கொள்வர்
எப்படி
மூன்றே வருடங்களில்
படித்து
பழனிவேல்
பதவி உயர்வு பெற்றுவிட்டார்
என்று
- மாதங்கி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09