தேசக்குரல்
என்
தேசத்து
வண்ணாத்துப்
பூச்சிகளே!
பனி உருகும்
தேசத்தின்
பாசக்குரல் கேட்கிறதா?
என்
தேசத்தின்
மின்மினி பூச்சிகளே!
கூடு கலைந்து வந்த
குயிலோசை கேட்கிறதா?
பின்னிரவு கடக்கும்
ஆட்காட்டி பறவைகளே!
எங்கள்
சாமத்து விழிப்பின்
அர்த்தங்கள் புரிகிறதா?
தேசத்து
புதல்வர்களே!
உங்கள் விழிப்பு
வரலாறு.
எங்கள் விழிப்பு
வரலாற்றுக்கான அடிக்குறிப்பு.
வனு.
பிரான்ஸ்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02