அரவிந்தன் கவிதைகள்
மௌனத்தை
கிழிக்கிற
சத்தம்
அடங்கியபின்
அதை விட சத்தமாய்
மீண்டும்
அறையும்
மௌனம்.
---------------------
குழந்தைகள்
போட்டிக்கு இல்லாத
இரவில்
பூங்கா ஊஞ்சலில்
ஆடுகிறது
காற்று.
----------------------
இலை சிந்தும்
மரமொன்றை
படமாக
வரைந்து வைத்தேன்
அதை யார் யாரோ
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்
விழுந்தது
இன்னுமொரு இலை!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02