1.
காதல் விசமென்று சொன்னார்கள்
நான் அவர்களைப் பைத்தியக்காரர்களென்றேன்
காதல் அமிர்தமென்றார்கள்
ருசித்துப்பாத்தேன்
தயவுசெய்து என்னிடம்
காதலென்றால் என்னவென்று
கேட்காதீர்கள்
ஏனெனில் உணர்வுகளேயில்லாத
உடலுக்குள் நான்
2.
இதயத்தில் இருந்து வெளியேறிய
மின்னலையொன்று
எவளோ ஒருத்தியின் இதயத்தில்
எப்படியோ ஊடுருவி
பதிலாக வந்த அந்த மின்னலைதான்
காதல்
3.
காதல்
எப்படி எங்கே யாருடன்
எதுவுமே தெரியாமல்
எதையும் தெரியாத உள்ளங்களும்
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத
ஏதோ ஒரு இன்பத்தை
நோக்கிச்செல்லும்
- நிர்வாணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01