வியர்வையை இரத்தமென சிந்தி
உடலை வில்லாய் வளைத்து
நிலம் உழுதவர் சிலர்
உலி அடிக்கும் கனத்தில
விரலை நசுக்கிக்கொள்ளும்
தட்டர்கள் சிலர்
தன் பசி அடைக்க
மாட்டின் பசியடைத்த
மயக்கத்தில் சிலர்
உண்மையில்
தலைக்கு மேல் வேலை
செய்தவர்கள் சிலர்
மாடு கட்டி அதே
இடத்தில் சுற்றி சுற்றி
செக்கடித்தவர்கள் சிலர்
அங்கங்கு சிலர் சேர்ந்து
பலராகக் கூடி இருந்தனர்
அந்த மாலைப்பொழுதில்
நான்கு பல்லாங்குத் தாண்ட
மிதி வண்டி மிதித்து
வந்து சேர்ந்தார்
அடுத்த கிராமத்து
ஆசிரியர்
அங்கு நடக்கப் போவது
மாலை வகுப்புக்கள்
முதியோருக்காக
அரசியல் வாதிகள்
படிக்காவிட்டால் என்ன
நம் கிராமமாவது படித்திருக்கட்டுமே...
நூறு சதவிகித கல்விக்கு
என அவர் சொல்லக்
கேட்டிருக்கிறேன்
தன் கடமை செய்ய
கையூட்டுக் கேட்கும்
காலத்தில்
தன் நேரத்தை
செலவு செய்து
பலனையும் எதிர்பாராமல்
தியாகத்தை கடமையாக
செய்பவரை எதில் சேர்ப்பது ?
- ஆனந்தன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01