நானாகிய நீ
எனக்கு
மனனம் செய்வது பிடிக்காது
அதையும் செய்வேன்
மனனம் செய்யும் பாடம்
நீயாக இருந்தால்...
என்
இதயம் இமைக்காமல்
காத்திருக்கும்
என்றுமுன் காதலுக்காக...
தினமுமுன் வருகைக்காக...
நீ
செல்லும் வழியெல்லாம்
வரமுடியாவிடினும்
நீ நடக்கும்
பாதையாகப்
பிறவிவேண்டும்...
என்
விழியின் கனவை
விரலால் நிறைத்தேன்
கவிதை...
என்
உயிரின் கனவை
உன்னில் புதைத்தேன்
காதல்...
என்
ஆயுளின் அகவையை
அன்பின் முகவரியை
உன்னில் விதைத்தேன்
“நம் வாழ்க்கை”
நீ
எப்படி அழைத்தாலும்
இனிமையாகத்தான்
இருக்கிறது...
நீ
அப்படியாரையும்
அழைக்கதாவரை...
இரவில்
கிடைத்த சுதந்திரமாய்
உதடு மட்டும் பேசும்
உன் வார்த்தைகள்...
என்
இதயப் பேனா
இயக்கப்படுவது
உனக்கான
காதலால்தான்...
உன் பெயரோடு
என் பெயர்...
சேர்த்துச் சொன்னேன்
கவிதை – ஒரு
புதுக்கவிதை...
கனவுகளையெல்லாம்
படம் பிடிக்கும்
வசதியிருந்திருந்தால்
வாழ்வே...
நிரூபித்திருப்பேன்
அத்தனை கனவுகளிலும்
அற்புதமாய்...
வந்ததும்...
வருவதும் நீயேயென்று...
உனக்கான
கவிதைகளே
எனக்கான
விருதுகள்...
நீ
காதலெனும் நாட்டின்
என்
இதயமென்னும் சாம்ராஜ்ஜியத்தின்
இனிய ராஜா
உன்
மனமெனும்
கல்லூரியில்
காதலெனும்
கலையில்
முனைவரெனும்
பட்டம் தா !
உலகத்துள் சிறந்த செல்வம் உன் காதல் - அக்காதல்
எனக்குள் உயிராம் தலை.
என்
நினைவைத் தின்ற
நிஜம்
நீ !
வார்த்தையாய் இருந்த வாழ்க்கை
வாக்கியமானது உன் வரவால்...
நானறிந்த மொழிகளிலே - உன்
நாமொழிபோல் இனிதானது
எங்கும் காணோம் !
வானம்
கண்ணுக்கெட்டும்
தூரம்தான்
பைனாக்குலரில்.
இடி மின்னலின்றி
மழை
கண்களில்..
--
- மகேத்ரா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-13