Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வேதம் புதிது...!

- த.சு.மணியம்

வேதம் புதிது...!

கூலிக்கு மாரடிக்கும்
கூனல் கிழவி சிலர்
வேலிக்குப் பொட்டு வைத்து
வெளியேறி நாட்சிலவில்
போலிக்கு வாழ்வளிக்கும்
புலம்பெயர் மண் கால் பதித்தே -இன்று
தாலிக்குக் கொடிபோதா
தடிப்பாகத் தேடுகின்றார்.

கைநாட்டுப் போட்ட கதை
கடக்கு முன்பே மறந்து விட்டு
ரை கோட்டு சகிதமுடன்
இராக்காலப் பனியில் நின்று
பை போட்டு கதைத்த அப்போ
பார்த்திருந்த வட்டு ஒன்று -ஆச்சி
டைபோட மறந்ததினை
ஞாபகத்தில் கொண்டு வந்தான்.

ஆங்கிலமும் தெரியுமென்று
அருகிருப்போர் அறிந்துகொள்ள
பாங்கிலவள் பேச எண்ணி
பத்து தரம் நோ நோ சொல்ல
மூங்கிலவன் கையெடுத்த -நல்ல
முரட்டுப் பொடியனுமோ
வாங்கினிலில் உட்கார்த்தி
வடிவாகச் சாத்திவிட்டான்.

வட்டிலிலே பழஞ்சோறு
குடித்த கதை கேட்கவுமே
வட்டிஸ்தற்? பழஞ்சோறு
பாட்டியவள் கேட்டுவிட்டு
கொட்டிக்க தன் பசிக்கு
கம்பூர்கர் வேணுமென -சந்தை
பெட்டிக்கை பாரன் என்று
பேரனுமோ சொல்லிவிட்டான்.

அப்புவுடன் சேர்ந்திருந்தால்
அரசுப் பணம் குறையுமெண்ணி
தப்புகளைத் தவிர்ப்பதற்காய்
தாத்தாவைத் தனியிருத்தி
கொப்பு ஒன்று வேண்டுமென்று
கோதையவள் தன்னருகே
சப்பு ஒன்றை வைத்தபடி
சந்தி பல சுற்றுகிறாள்.

சித்தெறும்பு கடித்த பாட்டை
சிறுகப் படித்தபடி
பெத்த பிள்ளையோடிருந்தால்
பேத்தி என்று சொல்வரெண்ணி
மெத்த சுகம் காண
மேல் மாடி வீடெடுத்து
செத்த பிணம் பலவும்
நித்தம் சுடலையிலே.

ஊரறியேன் பேரறியேன்
உண்மையிது நானறியேன்
வாழ்வறியேன் தொழிலறியேன்
வந்த இடம் வாழ்வறியேன்
சூதறியேன் வாதறியேன் -அவர்
சொல்லியதால் ஈதறிவேன்
நீதறிவீர் நினைத்திடுவீர்
நிலையற்ற வாழ்வுணர்வீர்.

த.சு.மணியம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-09-22


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எட்டில் சனி
  • எரிப்பேன் எள்ளு...
  • ஞான சூனியம்
  • போதுமடா சாமி...
  • தேடல் வலி...!
  • போதுமடா சாமி...2
  • சுடலை ஞானம்
  • இவர்கள் புனிதர்கள்
  • பெண்ணே யாருனைத் தடுத்தது?
  • எதுவும் புரியவில்லை?
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube