தமிழா !
நீ அழவேண்டாம்
எதற்காக அழவேண்டும் ?
எல்லாம் இழந்துவிட்டாய்
உலகத்தின் மூலைகளில் அகதியாய்
ஒதுங்கியும் விட்டாய்
இனிமேலும் எதற்காக அழவேண்டும்?
“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா“
பாடியவனும் உயிரோடில்லை
தலை நிமிர்ந்து நிற்க தலைகளே இல்லாமல்
எத்தனை தமிழர்
சுற்றம் சேராமல் ஒப்பாரியுமில்லாமல்
அழுகல் பிணங்களாய்
- நிர்வாணி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01