ஆன்மாக்கள்
-----------------
தொடர்ந்த
அலைத்தேடல்களில்
தொலைந்து போய்
இழப்பினால்
இருப்பில் குறைந்து
முற்றுப்பெறாத முடிவுகளாய்
இயலாமை ஈட்டிகளால்
குத்திக்கிழிக்கப்பட்டு
இரத்தக் காயங்களோடு
கூடிய முனகலோடு
சிறகொடிந்த
உயிர்ப்பறவைகளாய்
மீண்டும் உயிர்த்தெழுதலுக்காக
கூட்டித்தள்ளப்பட்ட
மூலைகளில்
மறுபயனீட்டுக்
குப்பைத்தொட்டிகளில்
குமித்து வைக்கப்பட்ட
குப்பைகளாய்
ஆன்மாக்கள்
- இராம. வயிரவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-05-20