சுகம்
கவி ஆக்கம்: கோட்டை “பிரபு"
ஆகா!
இதில் தான் எத்தனை சுகம்!
உள் நுழையம் போதே
ஒரு பூரிப்பு
திருப்பங்கள் யாவும்
சிலிர்ப்புகளாய்
வலம் இடமென
திரும்ப திரும்ப
ஆனால்
தன் வலிமையை
காட்ட இயலாத சலிப்பு!
வலிமையை புகுத்தினாலோ
தயங்காமல் எதிர்ப்பு எதிர்ப்படும்
காலங்கள் பல கடந்தும்
தொடர்கிறது இதன் பயணம்
அன்றாட குளியலைப் போல
அடுத்து இதுவும் வழக்கமாயிற்று!
கோழி இறகாய் பயணமானது
நவீன குச்சி முனைப் பஞ்சாகவும் தொடர்கிறது
கவி ஆக்கம்: கோட்டை “பிரபு"
006581477688
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15