மன்னன் பரமேசுவரன்
சிங்கம் கண்ட சிங்கப்பூர்
கவிஆக்கம்: சுதர்மன்
மன்னன் பரமேசுவரன் சிங்கம் கண்ட
சீரிளம் தீவுநாடுதான் இந்த சிங்கப்பூர்
“ராப்பிள்ஸ்” எனும் பிரிட்டிஷ் குடிமகன்
இதை உலகின் கடல்வழி அணைக் கலனாக்கினார்!
காடும் சேறும் கலந்தசதுப்பு நிலமாகவும்
கரடு முரடான புல்லும் புதராகவும்
மான் மறைகளின் மேச்சல் நிலமாகவும்
மீன்பிடிப்போர் தங்குமிடமாகவும் காட்சிதந்த இத்தீவை
இன்று:- நல்லவர்கள் தலைமையில் நானிலமாகவும்
நாப்பது லட்சம் நான்கின மக்களும்
கல்வியும் கலையும் கற்றுணர்ந்து வாழ்ந்திட
பொன்னான ஒரு பூமியை பெற்றிருக்கிறோம்
இனபேதமில்லாத இனிய கொள்கையுடைய நாடாகவும்
மதபேதமில்லாத மனித நல்லிண்க்க தேசமாகவும்
ஏற்ற தாழ்வில்லாத இனியபண்புள்ள உலகமாகவும்
போராட்ட மில்லாத புதுமை நாடாகவும் மாற்றியுள்ளோம்
இதிலும் பெருமைகொள்ள இல்லையொரு நாடு
இல்லையென்ற சொல்லுக்கு இலக்கணம் தேடும் நாடு
பன்னாட்டவரும் பணிபுரிந்து பாராட்டும் இன்நாடு
அக்கபக்க நாடுகளும் அகமகிழும் பொன்னாடு
உன்னால் முடியும்தம்பி நீ உயர்ந்திட பாடுபாடு
உன்தன்மான கல்வியேடு என்னாடும் போற்றிடும்
குறுக்குவழி ஏதுமில்லை நீ கோடீசுவராவதற்கு
உறங்காத சிங்கப்பூரில் உழைப்பிற்கே முதலிடம்
கவிஆக்கம்: சுதர்மன்
006567829683
- சுதர்மன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-15