Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஊரிலிருந்து....

- பட்டுக்கோட்டை தமிழ்மதி

ஊரிலிருந்து....

ஊரிலிருந்து வந்திருக்கிறாய்?

உன்னைப்
பார்பதற்குள் பரவசம் எனக்கு.

எனக்கு
என்ன சேதியை
கொண்டு வந்திருக்கிறாய்?

நீ
புறப்படுவது தெரிந்து
பூ கொஞ்சம்
வாசம் கொடுத்து அனுப்பியிருக்கலாம்.

நான்
நடந்த வரப்பு
நலம்கேட்டு விட்டிருக்கலாம்.

அறுவடைக்கா அடுத்த நடவுக்கா
வயலென்
வருகை கேட்டிருக்கலாம்.

மறந்தேனென்று
காற்று என்னை
தூற்றி விட்டிருக்கலாம்.

தொட நான் வருவதெப்போ என
தொட்டால்சினுங்கி
சொல்ல நினைத்து
சொல்லாமலிருந்திருக்கலாம்.

நான் நின்றமரம்
என்நிழல் தன்னிழலுக்குள்ளிப்பவும்
ஒளிந்துக் கொண்டிருப்பதாய்
உன்னிடம் சொல்லிவிட்டிருக்கலாம்.

காற்றாக நாற்றாக
வரப்பாக வயலாக
எல்லாம் நினைப்பாக...

அன்பானவனே...
நானிருக்குமிடம் நீவருவது தெரிந்தும்
அவளேதும் சொல்லிவிட்டிருக்கமாட்டாள்
உன்னிடம்
அவளை நானும் விசாரிக்கமாட்டேன்.

ஆனாலும் ...
ஆவலோடு சந்திக்கிறேன்
அவள் பொருட்டு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-14


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • தூரமும் பக்கம்தான்
  • உயிரிடம் ஒரு சந்தேகம்
  • நான் நீ
  • மின்னல்.... மின்னல்..
  • காணாமல் போகிறார்கள்
  • பேசும் மெளனம்
  • மே 17 விடுதலை வேட்கை தீ
  • பரிசு
  • சிறகடிப்பு
  • கூடை.. நினைவுகளே நீளுவதால்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube