விரல் பிடித்து
நுகர்ந்து பார்க்கிறாய்
சிகரெட்டின் வாசத்தை
நீயிட்ட கட்டளையை
மீறி விட்டதற்காய்
போபம் கொள்கிறாய்
மௌனத்தை விழுங்கியவனாய்
வேண்டி நிற்கிறேன்
நாற்றமடிக்காத சிகரெட்டுக்கும்
வாசம் நுகராத நாசிக்குமாய்
--------------
என்னை அழி
அல்லது
புறந்தள்ளி கழி
மகிழ்ச்சி தானெனக்கு
அழிக்க முயன்றால்
மூளையில் இருக்கிறேனென உணர்
கழிக்க முயன்றால்
இதயத்திலிருக்கிறேனென உணர்
எப்படியான போதும்
இருக்கிறேன் நான்.
--------------------------
இதழால் இதழ் பற்றி
வாழ்வியல் சுகத்தினை
நீ
கற்றுக்கொடுப்பாயெனில்
உடனடியாய்
இறக்கவும் சம்மதமே
-------------------------
உனக்கென்ன
பிடிக்குமென
அடிக்கடி கேட்கிறாய்
நீ
என்பதைத் தவிர
வேறு என்னவாய்
இருந்துவிடப்போகிறது
என் பதில்
-----------------------
சாமி தேர்
எங்கள் வீதிக்குக்கூட
வந்ததில்லையென்றேன்
மறுநாளே
என் வீட்டுக்குள்
வந்தாய் நீ
-----------------------
ஒரு முழம்
பூ கூட வாங்கிக்
கொடுத்ததில்லையென
சண்டை பிடிக்கிறாய்
பூந்தோட்டத்தை
ஒரு முழத்திலெப்படி
ஈடு செய்ய முடியும்
--- பாலபாரதி
- பாலபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03