முகவரி
-- அகில்
மனிதா
நீ வாழும் போது உனகென்றொரு
முகவரி தேடிக்கொள்
வாழ்ந்தோம் மடிந்தோம் என்று
இல்லாமல்
மனிதா
நீ வாழும்போதே உனக்கென்று ஒரு
முகவரி தேடிக்கொள்
நீ வாழும் காலம் மட்டுமல்ல
இனிவரும் காலமும்
உனது பெயர்
உச்சரிக்கப்பட வேண்டும் என்றால்
உனக்கென்று ஒரு
முகவரி தேடிக்கொள்
முகவரியில்லாத மனிதன் - நல்ல
அவயங்கள் இருந்தும் ஊனமானவனே!
கம்பனுக்கு இராமாயணம்
கவிபாரதிக்கு குயில் பாட்டு
வள்ளுவனுக்கு திருக்குறள்
இளங்கோவுக்கு சிலப்பதிகாரம்
இரவிவர்மனுக்கு ஒவியம்
சேக்ஸ்பியருக்கு நாடகங்கள்
சாண்டில்யனுக்கு நாவல்கள்
மனிதா
நீ வாழும் போது உனக்கென்று ஒரு
முகவரி தேடிக்கொள்
மானிடப் பிறவி நீ - இந்த
மண்ணுலகிற்கு என்ன செய்தாய்
உனக்கு ஒரு முகவரி தேடு
உன் வாழ்விற்கு அர்த்தம் கொடு
பட்டை தீட்டினால் மட்டுமே - கல்
பளபளக்கும் இரத்தினமாகும்.
உலக அனுபவம் கொண்டு
உன்னை நீயே புடம்போடு
புது உலகம் சமை
மண்ணை விட்டு நீ மறைந்தாலும்
மனங்களில் அழியா இடம் பெற
உனக்கென்று ஒரு
முகவரி தேடிக்கொள்
மனிதா
நீ வாழும் போதே உனகென்று ஒரு
முகவரி தேடிக்கொள்
- அகில்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03