வீடுபோகும் கனவுகள்
அவசரமான காலையின் நேரம்
அதிகமான வாகன ஓட்டம்
சதிகாரப் பனியின் கொட்டம்
சகதியாய் மாறிடும் ரோட்டும்
கனதியாய் உடைகள் வாட்டும்
கடுகதியாய் வந்திடும் பஸ்ஸீம்
நெரிசலாய் நகர்ந்திடும் நீள்வாகனம்
வரிசையின் நேரத்தைக் கூட்டிடும்
வண்டியைப் பிடித்திட ஓடிடும்
சண்டைக் கோழியாய் கூட்டமும்
முண்டியிட்டு மோதியே ஏறிடும்
மண்டையைப் பிய்த்திட நேரிடும்
கூட்டத்தில் இருக்கையைத் தேடிடும்
கூட்டத்தோடு நானுமங்கு நின்றிடும்
நேரத்தில் இடமும் வந்திடும்
நீண்டதொரு பெருமூச்சு வெளியேறும்
கடைசியில் வேலையைத் தொடங்கிடும்
போதினில் கண்களை நிறைத்திடும்
போதாத மாலைநேரம் வந்திடும்
மறக்க முடியாத சனக்கூட்டம்
நெரிசலுடன் ஏறிடத் துடித்திடும்
கரிசனைக் கனவுகளாய் கண்டிடும்
விருப்பமுடன் வீடுபோகும் கனவுகள்
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-20