கிபி 2000 க்குப் பின்
ஆறறிவு ஜந்துக்களினால் பாழடைந்த பூமி
எரிமலைக் குமுறலாய் பெருமூச்செறிந்தது,
நச்சு வாயுவை ஏந்திய காற்று பட்டமரங்களின் கிளைகள்
தழுவி எழுக என ஊழைக்காத்தாடிடும் -
எலும்புகளுக்கிடையில்
சூரிய கிழவனின் முகத்தை மறைத்து எழுந்த புகைகள் பல
கோடி ஆண்டுகளின் பின் பனியுகத்தை ஏற்படுத்தி ஓய்வு கொள்ள
எழுந்தது உயிரி பக்ரீறியாக்களும் ஜல்லிகளுமாய்
சூரிய துணை
கொண்டு வெளித்தது வானம் -
கூர்ப்பின் முதிர்ச்சியில் சில ஆறறிவு
ஜந்துக்களாகிட அதில் ஒன்று உரைக்கும் டார்வினைப் போல்
மனிதம் குரங்கிலிருந்து ....
6-1992
- மாலியன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-02-20