நிறம்
பனி படர்ந்து உலர்ந்த பாதையில் எப்போதும் போல
மங்கிய ஒளி தரும் தெருவிளக்கின் கீழ் குளிரில்
விறைத்துச் சிவந்த மூக்கு நுனியும் கிழிந்து துவழும்
மேல் மேலாடையும் அதன் மேல் அசிரத்தையுடன் ஒட்டப்
பட்டிருந்த ஒரு சிறு கனடியத் தேசியக் கொடியும் அடர்ந்த
நீண்ட பழுப்புத் தாடியில் நு£ற்றாண்டுகளாய்ச் சேர்ந்த
அழுக்கும் கறையும் உறைந்த பியர் நுரையின் படிவும்
தலையில் மழை பனி புயல் வெயில் எல்லாவற்றிலும்
அடிபட்டுத் தோற்றம் சிதைந்த காட்டுப்பச்சை இராணுவத்
தொப்பியும்
கூனல் முதுகும் வளைந்த நகங்களும் நீண்டு நெளிந்து
சிக்குண்ட மயிரும் எனச் சுருண்டு கிடந்து பாதி இருளும்
பாதி வெறியுமாய் அடிக்கடி திறந்து மூடும் நீலக்
கண்களுடன் கால் பணம் கேட்டு இரப்பவன் சில்லறை
எறிபவர்க்கு நன்றி என்கிறான்
எறிய மறுத்தேன்
' Fuck you, Paki"
என்று முகத்தைத் திருப்பினான்.
-- சேரன்
"மீண்டும் கடலுக்கு" தொகுப்பிலிருந்து
வெளியீடு: காலச்சுவடு
தொடர்புகட்கு :
kalachuvadu@sancharnet.in
91-4652-278525
- சேரன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16