Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தோழியரே... தோழியரே!!

- ஆ.மணவழகன்

தோழியரே... தோழியரே!!
=================
- ஆ. மணவழகன்

தோழியரே! தோழியரே!
நலமா! நீங்கள் நலமா!?
காலத்தின் கருவறையில்
கால்தடத்தைப் பதிக்க எண்ணும்
கவிதைகளே(!?)..
நலமா, நீங்கள் நலமா!?
எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,
உங்கள் உள்ளம் துடைக்க சில கேள்வி!
எம் பண்பாட்டைக் காத்து நிற்க - இது
படை திரட்டும் ஒரு வேள்வி!
'பெண்மொழி' என்று சொல்லி - நீ
பெண்மையைப் படையல் வைப்பதா?
உன்மொழி படித்த பெண்ணே - உன்
எழுத்தைத் தள்ளி வைப்பதா?
அச்சம் தவிர்த்து ஆடை களைந்த நிலையை - நீ
அனைவர் முன்னும் அள்ளி வைப்பதா?
கொண்டவனோடு கொண்ட உறவை - பார்
கொறிப்பதற்குக் கொடுத்து வைப்பதா?
கழிப்பறை வாசகத்தை - நீ
கவிதை என்று சாற்றி வைப்பதா?
காற்றினில் கலையும் மேகத்தை
'காலச் சுவடு'களில் ஏற்றி வைப்பதா?
ஆடைக்குள் மறைக்கும் அழகை
அட்டைப் படமாய் அரங்கேற்றுவதா?
உச்சரிக்கக் கூசும் சொல்லை
ஊரையே நீ உச்சரிக்க வைப்பதா?
இலக்கியத்தில் இடம்பிடிக்க - பெண்
இயல்பை நீ இழக்கலாமோ?
'பெண்மொழி' என்று சொல்லி
பேய்மொழி பிதற்றலாமோ?
வருங்காலம் உனக்கோர் இடத்தை
எப்படியும் வகுப்பதுண்டு!
வரலாற்றைப் புரட்டிப் பார்...காந்தியோடு,
'கோட்சே'யும் இருப்பதுண்டு!
சங்கத்திலும் உள்ளதென்று - பொய்யைத்
தயங்காமல் உரைக்கின்றாய்!
சங்கத்தைக் கற்றதுண்டா? - நீ
தங்கத்தைத் தொட்டதுண்டா?
மலர் சேரும் வண்டிற்கு
மணிநா முடித்த மாண்புண்டு!
மான் பிணை கொண்டதென்று
மருவி நின்ற பெண்ணுண்டு!
நாரையே சாட்சி என்று
நவின்ற ஒரு நங்கை உண்டு!
அறத்தோடு நிற்றலென்ற
அற்றை நாள் மாண்புண்டு!
மரத்தை மூத்தாள் என்று
மன்னவனை மறுத்தாள் உண்டு!
சங்கத்தை சாட்சிக்கிழுக்கும்
சடமே! நீ தெளிவாய் கண்டு!
பண்பு கெட்ட உன்னிடம் - நான்
பண்பாட்டைக் கேட்கவில்லை!
உனைப் படிக்கும் வெளிநாட்டார்
உரைப்பரே!
எம் பெண்டிரையும் கேவலமாய்!!
உன்னிடத்தில் ஒன்று சொல்வேன்! அதை
உன்னவர்க்கும் உரைக்க மறவாதே!
'எழுத்தில் பரத்தமை' - அதை
இனிமேலும் தொடராதே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அழைப்பிதழ்
  • சுடும்வரையில் நெருப்பு..
  • நான் நானாகவே.... நீ?
  • வேர்க்கும் நினைவுகள்
  • மயிலே இறகாய்....
  • வாழ்க்கையை வாழ முடியுமா?
  • என் சாளரத்தின் வெளியில் .. நீ
  • எதைச் சொல்ல..
  • வாழ்க்கை வணிகன் .. நகரியம்
  • கனவு சுமந்த கூடு.. பிறர்தர வாரா
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube