1, என் விருந்தாளி
சீராய் பெருக்¢கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள் - இது அவற்றின் வேலைதான்
முடிந்தவரை ஓரிரு சிறகுகள்-என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா?
கோதுமை நிறத்திலொன்று - மனைவி
அடர் நிறத்திலின்னொன்று - கணவன்
தம்பதியர் தங்குவதற்கு
தடையேதுமில்லை என்வீட்டில்
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடுகட்டி
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி . . . . கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
‘’ சிட்டுக்குருவியினம் 80 விழுக்காடு அழிந்து விட்டது
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே’’
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.
---------------
By - M. Padmapriya
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27