அத்தனையும் நீதான்......
என்னை தொட்டுச்சென்ற
ஐஸ் காற்றும்
நீ தான்..
கொதிக்கும் தென்றலும்
நீ தான்..!
உன் அசைவுகளில்
என்னை ஆட்கொண்டவனும்
நீ தான்...
அங்குமிங்கும் அலைய
வைத்ததும் நீ தான்..!
அடுக்கடுக்காய் இன்பங்களை
தந்தவனும்
நீ தான்...
அரைநொடிக்குள் என்னை
உருக்குலைய வைத்தவனும்
நீ தான்...!
என் இடைவெளிகளை
நிரப்பியவனும்
நீ தான்...
இன்று வெட்டவெளியாக்கியவனும்
நீ தான்...!
“அனலை தீண்டும் தென்றல்”
ச.ச.ஐஸ்வர்யா.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01