துளி நீர்
மழை மாலை நாளென்றில்
மங்கிய சாலை வெளிச்சத்தில்
ஆண்கள் கழிவறை அருகினில்
யுகங்கள் கடந்து
பார்த்துக்கொண்டோம்
கிழிந்து தொங்கியது
எங்கள் முகமூடிகள்
அவசரமாய் காற்றை
முத்தமிட்டோம்
நநைந்த நிலம் நோக்கி
கண்களை
மேயவிட்டோம்
கைகளை
நீட்டிக்கொண்டோம்
தொடவில்லை
நாயொன்றின்
குரைப்பில்
பிரிந்துகொண்டோம்
ரதன்
- ரதன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-18