வந்தது எப்படி
மனிதனுக்கு வந்த ஊனம்
ஊருக்கும் வந்ததெப்படி?
கண்களாயிருந்த பசுமை
பார்வையிழந்ததெப்படி?
இரத்தவோட்டமாயிருந்த நீரோடை
சிறு,சிறு நீர்தேக்கஙகளானதெப்படி?
தெற்கிலே செழித்து நிற்கும்
தேக்குமரக்கூட்டமே - உனக்குள்
ஊழல் வேர்கள்
ஊடுருவியதெப்படி?
இருபனையளவிருந்த மலைகள்
நலிந்து பொழிவிழந்து பொது -
- வழிப்பாதையானதெப்படி?
ஆழியாப் புகழே!
ஆரசபை மன்டபமே! நீ
இரவோடு இடிந்ததெப்படி?
ராட்சதவாகனம் கொண்டு
இடித்தார்களா? அல்லது
ராட்சதர்கள் கையாயுதம் கொண்டு
இடித்தார்களா?
கணிணிக்கும் எட்டாத கலை
கொண்ட ஊரே! - உன்னை
உரசிப்பார்க்க வந்தவர்கள் - உன்
தோலை உரித்ததெப்படி?
தென்றல் மட்டுமே
தொட்டுப்பார்க்கும் உன்னை
புயலொன்று புரட்டிப்
போட்டதெப்படி?
வருத்தமாய் கேட்கிறேன்
இத்தனை ஊனங்களும் - உனக்குள்
வந்ததுதான் எப்படி?
(பசுமைகளை பறிகொடுத்த கிராமத்தை
எண்ணி எழுதிய கவிதை)
இளங்கவி
வேம்பார். சு. சரவணன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-12-17