அடடா, அடடா
படிடா, படிடா என
ஜெல்லிக் கணங்களை
மறுபடி மறுபடி
பலபடி படிக்கவைத்த
தேவமைந்தனுக்கு,
ஜெல்லிக் கணங்களாய் நழுவும் முன்பு
உடனடி பாராட்டுகள்!
'முகத்தைச் சுழித்து
மோவாய் இடித்துப்
பார்த்ததே இல்லை'-
கணணியைக் கைப்பிடித்தவர்கள்
கண்டிப்பாய்ப் பாராட்டும்
கற்கண்டு வரிகள்!
'இதுவரையில் நான்
வாழ்ந்த கணங்கள் -என்
கண்ணிமைகளின்
மேலே அமாந்துதம்
கால்களைத் தொங்கப் போட்டுக்
கொண்டே என்னை ஆட்டி வைத்தன'
அருமையான சொல்லேவியம்!
ஆயிரம் குதிரைகள் வந்து தாவும்
இடத்தில்
மறந்தும் கூட
எங்கோ மறதியுள் இழுத்துச் செல்லாதபடி
'ஜெல்லிக் கணங்கள்
வந்து நம்மைக்
காத்ததால் பிழைப்போம்'
என
இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும்
பிணைத்து ஜெல்லிக் கணங்களுக்கு
நிகழ்காலப் பரிமாணங் காட்டிய
தேவமைந்தன் வாழ்க!
--பெஞ்சமின்
இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிணைத்து ஜெல்லிக் கணங்களுக்கு நிகழ்காலப் பரிமாணங் காட்டிய தேவமைந்தன் வாழ்க!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01
Comments