'வழக்கொன்றின் முடிவு' என்ற நிலவனின் கவிதையை வாசித்தேன்.அது எனக்குச் சற்று இருண்மை பொதிந்ததாய்த் தோற்றம் அளித்தது.ஆனாலும் அதன் கவிதை இயலும் தன்மை, கவிதைப் பொருளைத் தௌ¢ளெனத் தெரிவிப்பதால், ஆழமாக வாசிக்க முடிந்தது.விவிலியம் சார்ந்த அரக்க வீரன், தாவீது என்ற சிறுவனால் கவணில் கல்வைத்துக் குறிதவறாமல் எறியப்பட்டுக் கொல்லப் பட்டான். கவிதையின் இறுவாய்ப் பகுதியில், கோலியாத் என்ற அந்த அகந்தை அழிக்கப்பட்ட அரக்கவீரன், அதிநுட்பமாக உருவகிக்கப் பெறுகிறான். சிறுவன் தாவீதால் தண்டிக்கப்பட்ட கோலியாத்துக்கு அத்துடன் தண்டனை முற்றுப்பெற்றிருக்கலாம். ஆனால், அந்தப் பொழுதில் தண்டனைக்குத் தப்பி, கயவர்களாய் நூற்றாண்டுகள்தோறும் தம் வாழ்க்கையை வெவ்வேறான உருவங்களில் நகர்த்திச் செல்லும் அவனுடைய நண்பர்களுக்கும் இதோ தண்டனை காத்திருக்கிறது. இக்கவிதையை ஒருமுறை வாசித்தால் போதாது; மறுவாசிப்புக்கும் உட்படுத்திப் பொருளாழம் உணரப்பெறல் வேண்டும். அடுத்த கவிதையிலிருந்தாவது வாசகர்களை இருண்மையிலிருந்து விடுவிக்கும் போக்கை நிலவன் பின்பற்றுவாரா? நிலவனின் கவிதை ஆக்கங்கள் வெல்வதாகுக!
- தேவமைந்தன்(அ.பசுபதி)
'வழக்கொன்றின் முடிவு' என்ற நிலவனின் கவிதையை வாசித்தேன்.அது எனக்குச் சற்று இருண்மை பொதிந்ததாய்த் தோற்றம் அளித்தது.ஆனாலும் அதன் கவிதை இயலும் தன்மை, கவிதைப் பொருளைத் தெற்றெனத் தெரிவிப்பதால்,
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01
Comments