தன்னைச்சூள பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட ஒரு சூழலில் அன்றாட முரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்துவிடாமல் நிமிர்வதுதான் ஒரு கவிஞனுக்கு பெருமை. அந்தப்பெருமை கவிஞர் ஷிப்லிக்கு நிறையவே வாயத்திருக்கிறது. இவருடைய அகதி வாழ்வை சித்தரிக்கும் கவிதைகளைப் படிக்கும்போது மனசு புத்தளத்து களர் நிலத்தில் பரிதவிக்கும் உறவுகளின் நினைவில் நொறுங்கிப்போனது. கவிதையில் அவர் தொடர்ந்து முன்னேறி இலக்குகளை அடைய வாழ்த்துகிறேன்.
- வ.ஐ.ச. ஜெயபாலன்