ஈழத்தமிழ்ப் புலத்தில் விளையும் காத்திரமான பெண்ணியக் கவிதைகள் சமூகப்பயன்பாடு மிக்கவை. போரும் காதலும் ஒன்றையொன்று பின்னிகொண்டிருக்கையில, போர் ஆணினுடையதாகவும் காதல் பெண்ணுடையதாகவும் விரிகிறது. உடலையும் ரவைகள் தின்ன வேண்டியிருக்கும் போர் தின்ற பூமியின் ஊமையானதொரு வரலாறாய், ஃபஹீமா ஜஹானின் கவிதைத்தொகை, அல்லறும் அன்றாடத்திற்கிடையே நசுங்கிப்போகும் பெண்புலக் காட்சிகளை ஈரம் ததும்பும் சொற்களுடன் கண்டறிந்து கொடுக்கிறது