தீர்மானம்
பருவ வயதில்
பற்றவைத்த நெருப்பு
தினம் புகைத்து..
புகைந்து.. புறையோடி..
புற்றுநோய் குமுன்பே..,
மகிழ்ச்சி, துயரமென
ஏதேதோ காரணம் சொல்லி
திகட்டாமல் அருந்திய
ஆல்கஹால் கரைசலில்
குடலரித்து வெந்து -வெறுங்
கூடாய் போகுமுன்பே...,
நானெடுத்த
புத்தாண்டு தீர்மானம்!
நீண்டநாள் நண்பனை
நேற்று கண்ட பூரிப்பில்,
வெண்புகையில் வீழ்ந்து..
மதுவுக்குள் மூழ்கியது ! -அந்த
"நிலையில்லா தீர்மானம்"!
- தீபம் கோபி, சிங்கப்பூர் -
(dewwinds@yahoo.com)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21