Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பூசைக்காலம்... நிலை மாற்றம்

- நவின்

பூசைக்காலம்... நிலை மாற்றம்

01.
பூசைக்காலம்
-----------------

தலை தேங்காய்கள் உடைத்தாயிற்று
தீர்த்தம் இரத்தம் - தெளித்தாயிற்று !

சிகரெட் நுணியிலும்
அகல் திரியிலும்
மந்தமாய் ஒளிரும் - இந்த
பூனைக்குட்டி நெருப்பின் பசிக்கு
நூறு குடிசைகள் பொசுக்கி
யானை சோறு போட்டாயிற்று.

இன்னும் எத்தனை நாட்களாம்
இந்த சாதிக்கடவுளின் பூசைக்காலம்?




02.
நிலை மாற்றம்
------------------

கருப்பும் வெளுப்பும் மட்டும்
கடவுள் படைத்த நிறங்கள் என்றால்
சாம்பல் நிறத்து பூனைக்குட்டிகள்
எங்கள் வீட்டில் வளருவதேன்?

உயர்வும் தாழ்வும் மட்டும்
உண்மை நிலைகள் என்றால்
உலகின் தராசுகள் எல்லாம்
துக்கம் தொண்டையடைத்து
சமமாய் தொங்காமல்
'சவமாய்' அன்றோ தொங்கும்?

நீரின் நிலையென்ன?
திரமா? வளியா?
திரவியமா?

பிறப்பும் இறப்பும்
இரு நிச்சய நிலைகளா?
நான் வினவுமுன்
"இல்லை இல்லை
இரண்டுக்கும் நடுவே
'இருப்பு' என்ற
நிச்சயமில்லா நிலையுண்டு"
என்றுநீங்கள் இயம்பக்கூடும்.
நிச்சயம் இல்லாததை
நிலை என்று
எவ்வாறு உரைத்தீர்?

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே
உயிரின் நிலையை
ஓரளவு ஊகிக்க
உங்களால் முடியும்.
இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே
உயிரின் பயணத்தை
உரைக்க இயலுமா?

ஆக...
நீர் ஒரு நிலை யில்லை
உயிர் ஒரு நிலையிலில்லை
உலகும் நிலையில்லை!

அன்று கவிக்கோ சொன்னான்,
"சரி தவறுகளுகளையும்
சமய பேதங்களையும்
பிரிக்கும் வரையரைகள்
ஓடும் நீரில் கிழித்த கோடுகள்"
ஒன்றும் நிலையில்லை;

உழைத்துக் களைத்து
புடைத்து காய்த்த கைகளில்
பிறப்பு இரேகைகள்
இன்னமும் மாறாமலா இருக்கும்?

நிலை மாற்றம்!
மாற்றமே நிலை!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-25


Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube