மனிதம்
மாறி வரும் நாகரிகம் மறந்து வரும்
அகராதிகளில் மட்டும் அங்கம் பெறும்
மனிதமில்லா மனங்கள் வெறும் மகரந்தமில்லா மலர்கள்
இயற்கை பல இன்னல் தந்து அவ்வப்போது அறிமுகம் செய்யும்,
மனிதம் மனத்திற்கு மறக்காமல் இருக்க.
எதை எதையோ தேடி அலையும் மனிதா நீ
உன் மனிதத்தை தொலைத்ததெங்கே?
உன் கட்டிடக்காட்டின் அஸ்திவாரமாக்கி கொண்டாயா?
நாகராகத்திடம் நல்ல விலைக்கு விற்று விட்டாயா?
மனிதத்தை தொலைத்துவிட்டு மார்ஸிக்கு செல்கின்றாய்
அங்காவது தேடு தொலைத்ததை.
மாறிவரும் மனிதா உன் முகவரி மனிதத்தை தேடிப்பிடி
ஏனெனில்,
முகவரி இல்லா உனக்கும்,
மரத்தில் வாசம் செய்த உன் முன்னோருக்கும்
வித்தியாசம் என்ன?
அவர்களுக்காவது மரம் இருந்தது.
-உ. கிஷோர் குமார்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21