Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சோதனைச்சாவடி.. இலக்கு.. கையூட்டு

- ப.மதியழகன்

01.
சோதனைச்சாவடி
-----------------------------

பொறுமையை சோதிக்காதீர்கள்
உங்கள் பக்கம்
உண்மை இருந்தால்
மௌனமாக இருந்துவிடுங்கள்
பேதம் பார்க்காதீர்கள்
இறந்த பின்பு பிணம் தான்
என்பதை ஞாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்
நெருக்கடிக்கு உள்ளாகாதீர்கள்
எய்யப்பட்ட அம்புகளும்
சொல்லப்பட்ட வார்த்தைகளும்
எதிராளியை
காயப்படுத்தாமல் விடாது
ஒத்தி வைக்காதீர்கள்
உங்களுக்கான வாய்ப்பை
இழந்து நிற்காதீர்கள்
சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்
வாய்ப்பு இன்னொருமுறை
உங்கள் கதவைத தட்டாது
போதையில் மிதக்காதீர்கள்
பிறர் மனையை
கவர்ந்து இழுக்காதீர்கள்
பாதையை வகுக்காதீர்கள்
கடலில் விழும் மழைத்துளிக்கு
முகவரி உண்டா கேளுங்கள்
யோசனை செய்யாதீர்கள்
காகிதங்கள் குப்பையாகலாம்
அதற்காக வருத்தப்படாதீர்கள்
உலகமே சோதனைச் சாலைதான்
நாமெல்லாம் பரிசோதனை
எலிகள் தான் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்
ஆண்மை தவறாதீர்கள்
வாய்ப்பு கிடைத்தால்
ஒழுக்கம் தவறும்
நீச புத்திக்காரர்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள்
பாருங்கள்
கதவைத் தட்டாதீர்கள்
உள்ளே பிரார்த்தனை
ஏறெடுத்துக் கொண்டிருப்பதை
காது கொடுத்துக் கேளுங்கள்
பாவம் செய்து தொலைக்காதீர்கள்
இந்தச் சிறைச்சாலைக்குள்
மீண்டும் சிக்கித் தவிக்காதீர்கள்.


02.
இலக்கு
---------------
மரணமே இன்று வராதே
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்
நிறைய இருக்கின்றன
சம்பளத் தேதியில் இறக்க
யாராவது சம்மதிப்பார்களா
கட்டப்பட்ட வீட்டில் குடிபுக
ஆசையிருக்காதா
தவழும் குழந்தை
தத்தி நடப்பதை காணாமல்
போய்விடத் தோன்றுமா
மனிதனின் சராசரி வயதின்
பாதியைக் கூட இன்னும் கடக்கவில்லை
நரைமுடி கூட ஆங்காங்கே
இன்னும் தோன்றவில்லை
உறுப்புக்கள் எதுவும் செயலிழக்கவில்லை
பார்வைத்திறனும் குறையவில்லை
அன்பிற்கினியவர்கள் ஒவ்வொருவராய்
காலனின் அம்பு பாய்ந்து
வீழ்ந்த போது
தெரிந்து கொண்டேன்
எனக்குத் தான்
குறி வைக்கிறார்களென்று.


03.
கையூட்டு
-----------------------

அரசு அலுவலகங்களில்
கோப்புகள் இடம் மாறுவதற்குள்
குதிரைக்கு கொம்பு முளைத்துவிடும்
ஒரு ரப்பர் ஸ்டாம்புக்காக
குடிமகனின் பாக்கெட்டில் உள்ளதை
மொத்தமாக கறந்து கொண்டு
தான் விடுவார்கள்
உடைகளெல்லாம் பைகளாக
இல்லாவிடில்
குடிமக்கள் கொண்டுவந்து
கொட்டுவதை
அள்ளிப்போக முடியாது
அரசு கருவூலம் கொடுக்கும்
சம்பளம் போதாதென்று
பொது மக்களின் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்வார்கள்
தரகரின்றி நேரில்
அணுக முடியாத
அரசு அதிகாரிகளும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
லஞ்சம் கொடுத்து அரசு பணிக்கு
வரும் போது கைகள் பரபரக்கும்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடவுள் தந்த பரிசு.. தியாகத்தின்
  • மறுபக்கம்
  • நல்லதோர் வீணை.. புயலுக்கு பிந்தைய
  • தேவனின் திருக்கரம் .. நடைவண்டி
  • பாட்டுக்கு ஒரு தலைவன்
  • என் தேவதை இருக்குமிடம்
  • வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
  • உறக்கமற்றவனின் விடியல்
  • சபிக்கப்பட்டவனின்.. விடியல்
  • இறுதி இரவும்.. விளையாட்டுச் சங்கிலி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube