காயங்களுடன் ஒரு கன்னி மனசு...
----------------------------------------------
அசைந்தாடும் மரமே,
நீ அசைந்தாடி என் மேனி முழுக்க பரவசப்படுத்துகிறாய்..
நினைத்தேன் -நீ காற்றை தந்து மனம் மகிழ்விக்கும் மகா வள்ளல் என்று,
உணர்கிறேன் -யான் கண்ட குட்டி அனுபவங்களால்,,
நீ உன் மனம் குளிர
கிளைக்கரம் உதரி-
உன் களைகளான காய்ந்த சருகுகளை அகற்றுகிறாய் அல்லவா?
நானும் என் மனத்தை கீரி களைகள் தேடுகிறேன்,
காயம் தான் மிச்சம்,
தேடிய களைகளை காணவில்லை..
சடத்துவம் இல்லா ஒரு வெறுமை-
உள்ளத்தின் ஒரு டம்மி வெடிப்புக்குள்..
ஒரு வெளிச்சம் புகாதா?
ஏங்குகிறது -நீரின்றி கண்ட கோடை வரட்சி...
ஒரு மின்மினி பூச்சியும் இனி கதிரோன் தான்-
இவ்வவலநிலை தொடர்ந்து விட்டால்..
என் இரவுக்கும் ஒரு சூரியன் வராதா??
அணை கடந்த வெள்ளமாய், பல சிகிச்சைகளுடன் -ஒரு கன்னி மனது.....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31