Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கல்லாகிப்.. கூடு விட்டு.. பனிக் கண்கள்!

- அல் அமீனுல் தஸ்னீன்

கல்லாகிப் போன கவிஞன்!...கூடு விட்டு கூடு பாயும்!.. பனிக் கண்கள்!


01.
கல்லாகிப் போன கவிஞன்!
----------------------------------------

உயிருள்ள அரூபம்
நீண்ட எதிர்பார்ப்பின் தாகத்தை
உணர்வெங்கும் மழையாக்கி
இரவுகளில் குடை பிடிக்க

கண்களை நோக்க சக்தியற்ற மனதிடம்
யுத்தமின்றி சரணடைகையில்
தேம்பியழுகிறது அனாதையாய்
ஒற்றை முத்தம்.

குற்றுக்கோலமெங்கும் பதிலற்ற "ம்" இட்டு
கைசேதப்பட்டவனிடம் ஏந்தப்படுகிறது
கைவேண்டி ஓர் வரம்.

அழுகையை அரவணைக்க
அன்பை மொழியாக்க
கல்லாகிப் போன கவிஞனை
மீண்டும் செதுக்குகையில்

கவனம்
உளிகளிலொட்டும் மென்னீரம்
யார் மீதும் தெறிக்கப் படாதிருக்கட்டும்.



02.
கூடு விட்டு கூடு பாயும்!
------------------------------------

உச்சிமயிர் பிடுங்கியெறிந்த
ஐவிரல் பதினான்கு மடிப்புகளுள்
மூச்சடங்கு முன் துடித்த
பாவங்களின் ஒப்பாரி.

தற்கொலை கடிதமெழுதியவன்
அமர்ந்த நாற்காலியில்
தூக்கு மாட்டியவளின் கால்தடம்.

அரூபிகளின் அருவாள்கள்
துருவேறி துறவு பூண்டதால்
நாடிவர்மத்தில் துளைத்து
கருணைக் கொலை.

கவிதைகள்
இனி
கூடுவிட்டு கூடுபாயும்.



03.
பனிக் கண்கள்!
------------------------

எப்போதும் சொல்லி விட்டு வருபவள்
முதல் முறையாய் அறிவிப்பேதுமின்றி
பேரீச்சைபழங்களோடும் *ஸம் ஸம்* நீரோடும்
வந்திருக்கிறாள் நானில்லாத போது.

எப்போதும் முத்தமிடுபவள்
என்ன செய்திருப்பாளென தேடுகிறேன்
யாருக்கும் தெரியாமல்.

குழந்தைகளின் கன்னத்தில்
எனதறையின் ஒவ்வொரு மூலையில்
திறந்தே கிடக்கும் அலமாரிகளில்
வீட்டின் முன்னிற்கும் யூகலிப்டஸ் இலைகளில்
இருசக்கர வாகன கைப்பிடியில்
கடந்த ரம்சானில் வாங்கித் தந்த குர்தாவில்
எங்குமில்லை தடயங்கள்.

ஈத்தப்பழத்தோடு உரையாடிக் கொண்டே
பழைய கவிதை நூலை புரட்டினேன்.

சோக கவிதையின் கடைசிப்பத்தியில்
முத்தங்களை முட்டையிட்டிருக்கிறாள்.

இந்த கண்ணீர்த்துளிகள் படும் முன்
சடாரென மூடுகிறேன்
அடைகாத்தல் ஒரு கடினப்பணியே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-10-04


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மூவுதடுகளின்.. முடிவுறாத..துடிக்கிறது..பழைய

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube