இந்தக் கணம் போயின்
இந்தக் கணம் போயின்
பின் அது தோன்றதலு- மரிது.
எம் உதடுகளும் உடம்பும் கவ்
வுகிற நொடி போல்
நான் உன்னிலே தங்கி
அடங்கி
கிறங்கி
உடல் சீற
உன் சகல அங்கங்களுள்ளும்
காமுற்று மிதப்பவள்
எனினும்
கடந்து போகையில்
என் ஆன்மாவைக் அடக்கி மாயாதே
பிரிந்து போகவோ
உரத்துப் பேசவோ
அதிகமாய் சிரமப் படாமலே
கடந்து போகையில்
இப்போதல்ல எப்போதும்
உன்னைத் தவிர வேறொருவன் எனக்கு
நீயாக முடியா.
என் சிறிய தனங்களை
பிடித்திருக்கும் உன் பெரும் கரங்கள்
நெஞ்சச் வட்டுள்
கட்டிக் கிடக்கும்
இந்தக் கணங்கள்...
கீழ்மையையும் நச்சையும்
நீ உமிழ முன்
கொஞ்ச நேரம் பொறு.
உன் இலட்சியங்களின் பொது மேடையில்
என்னுடைய துயர்
பேசாதது.
சிரித்திருக்கும் மண்டபத்துள்
உன்னால் ஒலியற்ற என் குரலை
கேட்க முடியுமோ அறியேன்.
உன்னுள் இழைகிற
இனிமை கரைகிற
எனினும்
வரலாறு மறுத்த
-ஒரே ஒரு முறை
மூடிய கதவுகளுள்,
இருளுள்- நீ-ர்
புணர்ந்தெறிந்த
சேடிப் பெண்டிர்
கனத்த சீற்றத்துடன்
என்னிடம் வெளிப்படும்
அப்போதும்
நீ என்னை -வெறும்- காமமாய்,
அற்பமாய்- எண்ண முற்படினும்
நான் உன்னுடையவளேதான்
க.யசோதை (கனடா)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21